ஏதேதோ எண்ணம் 1
"தாமரை மேலே
நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும்
வாழ்வதென்ன...
நண்பர்கள் போலே
வாழ்வதற்க்கு
மாலையும் மேற்புறம்
தேவையென்ன...
சொந்தங்களே
இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கை
தான் என்ன...சொல்...
மன்றம் வந்த
தென்றலுக்கு மஞ்சம் வர
நெஞ்சம் இல்லையோ...
அன்பே என் அன்பே..."
என்ற பாடல் செவியில் இதமாக கேட்க...
அவனும் அந்த பாடலை மெதுவாக முனுமுனுத்து கொண்டே coffee போட்டு எடுத்து கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தான் செழியன்...
கதவு திறக்கும் சத்தம் கேட்டு அவன் மனைவி வேதன்யா தூக்கம் மெதுவாக கலைவது போல் தெரிய...
செழியன் அப்படியே நின்று அவள் முகத்தை பார்க்க...
அவள் திரும்பி படுத்து கொண்டு மறுபடியும் தூக்கத்தை தொடர்ந்தாள்...
அவளை பார்த்து விட்டு மெதுவாக சத்தம் வராதவாறு கதவை சாந்தி விட்டு வெளியே வந்து newspaper எடுத்து படித்து கொண்டே coffee குடித்தான்...
செழியன் மணியை பார்க்க... 6.30 என்று காட்ட... வேகமாக குடித்த coffee cup ஐ எடுத்து கொண்டு kitchen க்குள் நுழைத்து cup ஐ கழுவி விட்டு மறுபடியும் அறை கதவை மெதுவாக திறந்து எட்டி பார்க்க...
அவள் இன்னும் உறக்கத்திலேயே இருக்க...அவள் பார்த்து மெலிதாக புன்னகைத்து விட்டு வெளியே வந்தான்...
Kitchen க்குள் நுழைந்து fridge ஐ திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க...
மாவு இருக்க...எடுத்து வெளியே வைத்து விட்டு இட்லி cooker ஐ எடுத்து தண்ணி ஊற்றி gas ஐ பற்ற வைத்து சட்னி என்ன வைப்பது என்று யோசித்தான்...
தேங்காய் சட்னியும் மல்லி சட்னியும் வைத்தான்...
இட்லி வெந்ததும் எடுத்து hot box ல் வைத்து விட்டு Kitchen ஐ clean செய்து விட்டு எல்லாத்தையும் எடுத்து கொண்டு போய் dinning table ல் வைத்து விட்டு அங்கே இருந்த sofa வில் அமர்ந்தான்...
ஏதோ ஞாபகம் வர... வேகமாக மணியை பார்க்க...
மணி 7.30...
மணியை பார்த்ததும் வேக வேகமாக கிளம்ப தன் அறையை நோக்கி சென்று கதவை திறந்து உள்ளே நுழைய...
வேதா எதிரே வந்தாள்...
அவள் அவனை பார்த்ததும் தலை குனிந்து நிற்க...
செழியன் : coffee...
வேதா : Sorry...
செழியன் : எதுக்கு...
வேதா : ரொம்ப நேரம் தூங்கிட்டேன்...
செழியன் : பரவா இல்ல... அசந்து போய் தூங்கிட்ட... இதுல என்ன இருக்கு...
வேதா : என்னைய எழுப்பி இருக்கலாமே...
செழியன் : கல்யாணம் ஆன இந்த மூனு மாசத்துல ஒரு நாள் கூட நீ இப்ப அசந்து தூங்கி நா பாத்தது இல்ல... எழுப்ப மனசு வரல... அது தான் விட்டுட்டேன்...
வேதா : இருங்க கொஞ்ச நேரத்துல tiffin ready பண்ணிடுறேன்...
செழியன் : தேவை இல்ல...
வேதா : கோச்சுக்காதீங்க.. இதோ போய் ready பண்ணிடுறேன்... நீங்க கிளம்பி வர்றதுக்குள்ள ready ஹ இருக்கும்...
செழியன் : "அது தான் தேவை இல்ல னு சொல்றேனே... நீ குளிச்சு கிளம்பு... நா guest room ல போய் கிளம்புறேன்... Time போ போய் கிளம்பு..."என்று Towel ஐ எடுத்து பக்கத்து அறைக்கு செல்ல...
வேதா புரியாமல் விழித்தவாறு kitchen கல்குளம் நுழைந்தா பார்க்க...
எல்லாம் clean செய்து பாத்திரம் wash பண்ணி இருந்தது...
Dining table ல் பார்க்க...இட்லியும் ரெண்டு சட்னியும் இருந்தனர்...
வேதா :"இவரா சமைச்சாரு..."என்று ஆச்சரியத்துடன் நினைத்து கிளம்ப சென்றாள்...
வேதா குளித்து துண்டை உடலில் சுற்றி கொண்டு குளியலறையில் இருந்து வெளியே வர...
செழியன் வெற்று மார்புடன் இடுப்பில் துண்டை கட்டி தலை மூடியை தட்டியவாறு கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய...
வேதாவும் செழியனும் நேருக்கு நேர் பார்த்து வேகமாக திரும்பி கொண்டு முதுகை காட்டி நின்றனர்...
செழியன் தயங்கியவாறு "Sorry... Sorry...என் dress ஹ எடுத்து எடுத்துட்டு போலாம் னு வந்தேன்... நீ... நீ குளிக்க போ போய் இருப்ப னு நினைச்சேன்..."என்று திக்கி திணறி சொல்ல...
வேதா : இல்ல பரவா இல்லங்க...
செழியன் தலையை சொரிந்தவாறு "நீ.. நீ dress change பண்ணு... நா வெளிய wait பண்றேன்..."என்று நகர முயல...
வேதா : "இல்லங்க... நீங்க உங்க dress எடுத்துக்கோங்க..."என்று குளியலறைக்குள் நுழைய...
செழியன் மெதுவாக திரும்பி பார்த்து விட்டு வேகமாக தன் உடையை எடுத்து கொண்டு "வேதா நா dress எடுத்துட்டேன்... நீ வா..."என்று வெளியே வந்து கதவை சாத்தி செல்ல...
கதவு சாத்தும் சத்தம் கேட்டு வேதா மெதுவாக குளியலறை கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி பார்த்து பெருமூச்சு விட்டு வெளியே வந்து சேலையை கட்டலாமா இல்ல சுடிதார் போடலாமா என்று யோசித்து சேலையை கட்டி தலை வாரி ஒப்பனை பொருட்களை பார்த்து ஏதோ யோசித்து அதை ஒதுக்கி விட்டு பொட்டு வைத்து நெற்றி வகுடில் குங்குமம் வைத்து கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்து கொண்டாள்...
எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமலே அவள் அழகாக தெரிந்தாள்...
தன்னோடு பொருட்களை எடுத்து கொண்டு மறுபடியும் கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்து விட்டு வெளியே வந்தாள்...
செழியன் tie ஐ கட்டாமல் கழுத்தில் மாலை போல் போட்டு கொண்டு sofa ல் அமர்ந்து TV பார்த்து கொண்டு இருந்தான்...
வேதா : "ஏங்க tiffin..."
என்று இழுக்க...
செழியன் : நா சமைச்சுட்டேன்...
வேதா : அத தான் நானும் கேட்குறேன்... என்னைய எழுப்பி இருக்கலாம் ல... உங்க எதுக்கு சிரமம்..
செழியன் : இதுல என்ன சிரமம்... Every day morning நீ இப்படி தான் எழுந்து எனக்காக சமைக்கிற... அது மட்டும் சிரமம் இல்லையா...
வேதா : அது இல்லங்க...
செழியன் : "எனக்காக நீ சிரமப்படும் போது உனக்காக நா சிரமப்பட்டா ஒன்னும் தப்பு இல்ல...வா சாப்டலாம்..."என்று Dining table நோக்கி செல்ல...
வேதா அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்...
செழியன் : வேதா time ஆகலையா... என்ன பண்ற...
வேதா : "ஹான் இதோ வந்துட்டேங்க..."என்று dinning table ல் வந்து அமர...
செழியன் தட்டில் மூனு இட்லியும் சட்னியும் வைத்து அவனும் தட்டில் போட்டு சாப்பிட...
அவள் சாப்பிடாமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்...
செழியன் : என்ன சாப்டல.... நா சமைச்சது பிடிக்கலையா...
வேதா : "நா இன்னுமா சாப்ட கூட இல்லங்க..."என்று இட்லியை பிய்த்து சட்னியில் தொய்த்து வாயில் வைத்தவள்....
அவனையே பார்த்தாள்...
செழியன் : என்ன ஆச்சு...
வேதா : நீங்க எப்படி சமைக்க கத்துக்கிட்டீங்க...
செழியன் சாப்டு கொண்டே "அம்மா சமைக்கும் போது பாத்து இருக்கேன்... அப்பப்போ அம்மாக்கு help பண்ணுவேன்..."
வேதா : இது வரைக்கும் என் கிட்ட சொல்லவே இல்ல...
செழியன் நிமிர்ந்து பார்க்க...
அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து தலை குனிந்து கொண்டு சாப்பிட்டாள்...
செழியன் சாப்டு தட்டை எடுக்க...
வேதா : வைங்க... நா எடுத்துக்கிறேன்... நீங்க கிளம்புங்க...
செழியன் : இல்ல நா கழுவிக்கிறேன்...
அவள் முகம் வாடி போனது...
செழியன் கிளம்பி வெளியே வர...
வேதா mobile ஐ பார்த்து கொண்டு இருந்தாள்...
செழியன் : என்ன இன்னும் கிளம்பலையா...
வேதா : cab book பண்ணிட்டு இருக்கேன்...
செழியன் : ஏன் உன் car என்ன ஆச்சு..,
வேதா சிறு முறைப்புடன் "என் car ஹ service கொடுத்து இருக்கேன் னு நேத்து சொன்னேன் ல... மறந்துட்டீங்களா..."என்று கேட்க...
செழியன் நெற்றியை தடவியவாறு "Sorry ஞாபகம் இல்லை...சரி எதுக்கு cab... நா drop பண்ண மாட்டேனா..."என்று கேட்க..
வேதா பேசாமல் நிற்க...
செழியன் : "சரி car எடு... நா lunch bag ready பண்ணிட்டு வரேன்..."என்று key ஐ நீட்ட...
வேதா : "lunch pack பண்ணிட்டேன்..."என்று தன் பக்கத்தில் இருந்த bag ஐ எடுத்தா நீட்ட...
செழியன் ஆச்சரியத்துடன் அவளை பார்த்து கொண்டு bag ஐ வாங்கினான்...
வேதா : "நீங்க car ஹ எடுங்க... நா என் bag ஹ எடுத்துட்டு door lock பண்ணிட்டு வரேன்..."என்று ரெண்டடி எடுத்து வைத்து நின்று திரும்பி பார்த்து அவன் அருகே நெருங்கி வர...
செழியன் விழி விரிய அவளை பார்க்க...
வேதா அவன் அருகில் சென்று அவன் மேல் கை வைக்க போய் அவன் tie ஐ பிடித்து "என்னங்க நீங்க tie சரியா கூட கட்டல..."என்று கீழே இறங்கி இருந்த tie ஐ சரி விட்டாள்...
செழியன் அவள் முகத்தையே பார்க்க...
வேதா : "ம்ஹீம் இப்ப எப்படி இருக்கு...இப்ப போங்க நா வரேன்..."என்று உள்ளே செல்ல...
செழியன் அவள் போவதையே பார்த்து கொண்டு தனக்குள்ளே சிரித்து கொண்டு வெளியே சென்றான்...
வேதா தன் bag ஐ எடுத்து கொண்டு தன் அறையை சாந்தி விட்டு hall ஐ கடந்து main door ஐ நோக்கி வந்தவள்...
ஒரு நிமிசம் நின்று தனக்கு வலது புறம் திரும்பி பார்க்க...
செழியன் வேதன்யா திருமண புகைப்படம் ஆணியின் உதவியோடு கம்பீரமாக தொங்க...
அந்த புகைப்படத்தில் இருந்த செழியன் வேதா முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை...
வேதா தன் கழுத்தில் தொங்கிய தாலி சரடை தொட்டு பார்த்து பெருமூச்சு விட்டு வேகமாக வெளியேறினாள்...
தொடரும்...
# nancy
1 Comments
Samma intro keep going and best of luck to ur story🤩🥰💐💐🥳
ReplyDelete